/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-நாம் வாயிலாக ஏலம்; கொப்பரை கிலோ ரூ.231
/
இ-நாம் வாயிலாக ஏலம்; கொப்பரை கிலோ ரூ.231
ADDED : செப் 08, 2025 10:24 PM

உடுமலை; மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த இ-நாம் ஏலத்தில், ஒரு கிலோ தேங்காய் ரூ. 71க்கும், கொப்பரை, ரூ. 231க்கும் விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், இ-நாம் திட்டத்தின் கீழ், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 2,118 கிலோ எடையுள்ள, 5,200 தேங்காய்களை, 19 விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஏலத்தில், ஏழு வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக, ஒரு கிலோ, ரூ.71க்கும், குறைந்த பட்சமாக கிலோ ரூ.66க்கு விற்பனையானது. சராசரியாக, தேங்காய் தேங்காய் கிலோ ரூ.68க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 485 ரூபாயாகும்.
அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 15 விவசாயிகள், 551 கிலோ எடையுள்ள, 15 மூட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏழு வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், அதிகபட்சமாக கிலோ, ரூ.231க்கும், குறைந்த பட்சமாக, ரூ.200 என, சராசரியாக, 223 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 154 ரூபாயாகும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விளைபொருட்கள் தரம் பிரித்து ஏலம் விடப்படுவதால், கூடுதல் விலை கிடைக்கிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.