/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி 'பைனல் டச்'
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி 'பைனல் டச்'
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி 'பைனல் டச்'
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி 'பைனல் டச்'
ADDED : ஆக 16, 2025 10:29 PM
திருப்பூர்; சிவா டெக்ஸ்டைல்ஸ் ஆடி ஆடை விருந்தின் 'பைனல் டச்' என்ற பெயரில், கடந்த 13ம் தேதி முதல், இன்று வரை, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் ஆடை ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சிவா டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் சரவணன் கூறியதாவது: கோவை, ஊட்டி, திருப்பூர், சேலம், கரூர், கோபி, குளித்தலை உள்ளிட்ட இடங்களில், பிரபல துணிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. தற்போது, ஆடி ஆடை விருந்து என்ற பெயரில், ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
'பைனல் டச்' என்ற பெயரில், கடந்த 13ம் தேதி துவங்கிய சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய ஆடை விற்பனை இன்று(17ம் தேதி) வரை நடக்கிறது.
வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ரெடிமேட் ஆடைகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி, சர்ட்டிங், சூட்டிங் ரகங்கள், டிசைனர் பிளவுஸ்கள், ஆண், பெண்களுக்கான உள்ளாடைகளுக்கு, 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பேபி ஷிபான் சேலை, 129 ரூபாய், மார்பிள் பியூட்டி சேலை, 149 ரூபாய் மற்றும் 9 கே.ஜி., ெஹவி டர்க்கி சேலை, 179 ரூபாய், லினன் சேலை, 199 ரூபாய்.
காட்டன் சேலைகள், 149, அஸ்தா சில்வர் ஜரி சேலை, 249, லினன் டிஜிட்டல் சேலை, 299, லினன் சில்வர் ஜரி சேலை, 349, லிச்சி மீனா புட்டா சேலை, டிஜிட்டல் சாப்ட்டி சேலை, காப்பர் புட்டி சேலை ஆகியவை, 449 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கரிஷ்மா சாப்ட் சில்க், 499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுதவிர, கேர்ள்ஸ் பிளாஸ்சோ, 149 ரூபாய், கோட் செட், ஈஷா டாப்ஸ், கேஷ்வல் பிராக் ஆகியவை, 199 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நிஷாமிடி, கேர்ள்ஸ் குர்த்தீஸ் ஆகியன, 249 ரூபாய்; டிரெண்டி வெஸ்டர்ன், 499 ரூபாய், கேர்ள்ஸ் 3 பீஸ் செட், 649 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இளம் வயதினருக்கான, டி சர்ட், 99 ரூபாய் முதலும், ஆண்களுக்கான ஏ.பி.ஏ., பர்முடாஸ், 79 ரூபாய் முதலும் கிடைக்கிறது.
3 சன்சிட்டி ஜீன்ஸ் பேன்ட், 999 ரூபாய்க்கு கிடைக்கும். காம்போ ஆபர்களும் உண்டு. ஏராளமான புதிய ரக ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.