ADDED : மே 27, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில் வழி பஸ் ஸ்டாண்டுக்கு வசந்த் என்பவர் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில் வழி நோக்கி தாராபுரம் ரோட்டில், 14 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தார்.
செட்டிபாளையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த டிராவல்ஸ் பஸ், ஆட்டோவை முந்த முயன்ற போது, ஆட்டோவின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், நிலை தடுமாறி ஆட்டோ அருகில் இருந்த பழக்கடைக்குள் புகுந்தது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உட்பட, நான்கு பேர் காயமடைந்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.