/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரர் விபத்தில் பலி; மர்மம் நீடிப்பு
/
ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரர் விபத்தில் பலி; மர்மம் நீடிப்பு
ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரர் விபத்தில் பலி; மர்மம் நீடிப்பு
ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரர் விபத்தில் பலி; மர்மம் நீடிப்பு
ADDED : ஜன 09, 2024 01:10 AM

திருப்பூர்;அவிநாசி டி.எஸ்.பி., யின் போலீஸ் டிரைவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். விபத்தில் சிக்கிய பயணியர் ஆட்டோ குறித்த மர்மம் நீடிக்கிறது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி., பவுல்ராஜ். சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் உள்ளார். புதிய டி.எஸ்.பி., இன்னும் பொறுப்பேற்காதததால் பவுல்ராஜ் அதே பொறுப்பில் தொடர்கிறார். இவரது வாகன டிரைவர் அருள்குமார், 36. பெருமாநல்லுார் ஸ்டேஷனை சேர்ந்த முதல்நிலை காவலர்.
கடந்த, 5ம் தேதி அருள்குமாரும், டி.எஸ்.பி., அலுவலக போலீஸ்காரர் வெங்கடாசல மூர்த்தி, 36 என்பவரும் பயணியர் ஆட்டோவில் (பதிவு எண்: டிஎன்.66.ஏஎம்.1912) பெருமாநல்லுாரில் இருந்து அதிகாலை, 5:00 மணிக்கு திருநெல்வேலி கிளம்பினர். மதியம், விருதுநகர் மாவட்டம், சாத்துார் பைபாசில் சென்ற போது ரோட்டின் பக்கவாட்டு தடுப்பில் ஆட்டோ மோதியது.
அருகில் இருந்த மக்கள், போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆட்டோவை ஓட்டி சென்ற அருள்குமார் இறந்தார். இவருக்கு மனைவியும், 6 மற்றும் 2 வயதில் பெண் குழுந்தைகள் உள்ளனர். உடன் சென்ற வெங்கடாசல மூர்த்தி உயிர் தப்பினார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மர்மம் நீடிப்பு
டி.எஸ்.பி., பவுல்ராஜின் உறவினர் ஒருவருக்காக திருப்பூரிலுள்ள பைனான்ஸ் நிறுவனத்திலிருந்த ஆட்டோ வாங்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள உறவினரிடம் ஒப்படைக்க சென்றனர் என கூறப்படுவது குறித்தும் விசாரணை நடப்பதாக, திருப்பூர் எஸ்.பி., சாமிநாதன் தெரிவித்தார்.
அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜிடம் கேட்டபோது '' விருதுநகருக்கு ஆட்டோ ஓட்டி சென்ற அருள்குமார் ஓய்வில் இருந்தார். வெங்கடாசல மூர்த்தி விடுப்பு எடுத்து இருந்தார். வெங்கடாசலமூர்த்திக்கு சொந்தமான ஆட்டோவை ஒருவருக்கு கொடுப்பதற்காக சென்ற போது விபத்து ஏற்பட்டது. ஆட்டோ எனக்கு சொந்தமானது இல்லை. எனது பணிக்காக இருவரும் செல்லவில்லை,'' என்றார்.