/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரம்; தீர்வு அவசியம்
/
ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரம்; தீர்வு அவசியம்
ADDED : ஜன 05, 2026 05:23 AM

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள நுழைவாயிலில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இங்கு, புதிதாக ஆட்டோக்கள் இயக்க அனுமதி கேட்டு பலர் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஆட்டோ ஸ்டாண்டை பயன்படுத்துபவர்கள், இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி, வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் என்று, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் வைக்கப்பட்டன.
பஸ் ஸ்டாண்டுக்கு வெளிப்புறம், தேசிய நெடுஞ்சாலையோரம் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் புதிதாக வந்த சிலர், பஸ் ஸ்டாண்ட் முன்புறம் ஆட்டோக்களை நிறுத்தினர். வழக்கம்போல், ஏற்கனவே ஆட்டோ ஓட்டி வருபவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பழைய ஆட்டோ டிரைவர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இது நீடித்து வரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.
போலீசார், நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருடன் பேச்சு நடத்தி உரிய தீர்வு காண ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

