sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசி தேர்த்திருவிழா சிறப்பு மலர் 02

/

அவிநாசி தேர்த்திருவிழா சிறப்பு மலர் 02

அவிநாசி தேர்த்திருவிழா சிறப்பு மலர் 02

அவிநாசி தேர்த்திருவிழா சிறப்பு மலர் 02


ADDED : மே 07, 2025 02:01 AM

Google News

ADDED : மே 07, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரிய தேர் - பயோடேட்டா

தமிழகத்தில், பழமையான கோவில்களில், தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்துார் தேர்களுக்கு அடுத்ததாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர், மிக உயரமானது. மொத்தம், 300 டன் எடை கொண்டது.

முதன்முதலாக, இரும்பு சக்கரம் பொருத்திய தேர் என்ற பெருமை பெற்றது. 11 அடி உயரத்தில், ஆறு சக்கரங்கள், சோமாஸ்கந்தர் உலாவரும் தேரை வாங்கி நிற்கின்றன. மொத்தம், 95 அடி உயரம் கொண்ட இத்தேர், முழுவதும் இலுப்பை மரத்தால் வடிவமைக்கப்பட்டது.

பல நுாற்றாண்டுகளாக உலா வந்த திருத்தேர்கள், கடந்த, 1990ல் கார்த்திகை மாதம் தீக்கிரையாகின. ஆன்மிக பெரியோரின் முயற்சியால், இரண்டே ஆண்டுகளில் புதிய தேர்கள் வடிவமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக, தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. தேர் வடிவமைப்பு பணி நடந்த போதும், பனை ஓலையில் அலங்கரித்த சப்பரத்தில், சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தனர்.

முன்பெல்லாம், 15 நாட்கள் வரை உற்சவம் நடக்கும். சுவாமிகளுடன் தேர் ஆங்காங்கே நின்று நிலைவந்து சேரும். அர்ச்சகர்கள், தேரின் மீது ஏறி, இறங்க ஏதுவாக, இத்தேரில் சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. இலுப்பை மரத்தில், இயற்கையாகவே எண்ணை பசை அதிகம் உள்ளது; மிகவும் வலுவானது. எளிதில் பூச்சி அரிக்காது என்பதால், இலுப்பையில் இத்தேர் எழிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது; பக்கத்துக்கு 100 என, 400க்கும் அதிகமான மரச்சிற்ப சுதைகள் தேர் முழுவதும் அலங்கரிக்கின்றன. தேர் வீதியுலாவின் போது, ரீங்காரம் பாடும் வகையில் ஏரளமான வெண்கல மணிகளும் தேரில் பொருத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us