/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பெரிய கோவில் நுழைவாயில் பணி மந்தம்
/
அவிநாசி பெரிய கோவில் நுழைவாயில் பணி மந்தம்
ADDED : ஜன 09, 2024 12:28 AM

அவிநாசி;அவிநாசி பெரிய கோவிலுக்கு செல்லும் நுழைவுவாயில் பணிகள் தொடர்ந்து மந்தகதியில் நடப்பதாக, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முழு வீச்சில் திருப்பணி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கோவில் நுழைவாயில் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டு, சில காரணங்களால் பாதியில் நின்றது.
தற்போது, 14 ஆண்டு கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கையான, நுழைவாயில் கட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு உபயதாரர் மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில் நுழைவாயில் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக, பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கும்பாபிேஷக விழாவுக்கு, பல பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கில் மக்கள், கூட்டமாக வரும்போது, கோவிலுக்கு வரும் பிரதான வழியில் புதியதாக கட்டப்படும் நுழைவாயில் கட்டுமான பணிகள் மந்தமாக நடப்பது குறித்தும், கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிக்கப்பட்ட பின், அவசரகதியில் நுழைவாயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதாக பக்தர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.