/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பதிகங்கள் நுால் வெளியீடு
/
அவிநாசி பதிகங்கள் நுால் வெளியீடு
ADDED : பிப் 03, 2024 12:17 AM

வாத்தியார் சுவாமிகளின், 'அவிநாசி பதிகங்கள்' நுால் வெளியீட்டு விழா நடந்தது.
அவிநாசி திருத்தலத்தில், 80 ஆண்டுகளுக்கு முன், சித்தராய் விளங்கிய வாத்தியார் சுவாமிகள், பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடல்கள், 11 பதிகங்களாக ஓலைச்சுவடியில் இருந்தது. கடந்த, 1969ல் அச்சிடப்பட்டிருந்தது.
மாதொருபாகனார் அறக்கட்டளை சார்பில், ஓலைச்சுவடி பதிப்பில் இருந்து மீண்டும், அவிநாசி பதிகங்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நுால் வெளியீட்டு விழா, அவிநாசி கமாட்சியம்மன் கோவிலில் நடந்தது.
திருநீலகண்டபுரம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். கமாட்சியம்மன் கோவில் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொங்குபாளையம் சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலைய முதல்வர் சக்திவேலுசாமி, நுாலை வெளியிட்டார்.
புளியம்பட்டி, அண்ணாமலையார் வழிபாட்டு குழுவை சேர்ந்த திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் ரமேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாதொருபாகனார் அறக்கட்டளை நுால் பதிப்பாளர் சுந்தரகணேசன் ஏற்புரை வழங்கினார். அவிநாசி, இளநிலை மின் பொறியாளர் நந்தீஸ்வரன் நன்றி கூறினார்.

