/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி வட்டார கலைத்திருவிழா; 760 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
அவிநாசி வட்டார கலைத்திருவிழா; 760 மாணவ, மாணவியர் பங்கேற்பு
அவிநாசி வட்டார கலைத்திருவிழா; 760 மாணவ, மாணவியர் பங்கேற்பு
அவிநாசி வட்டார கலைத்திருவிழா; 760 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : நவ 09, 2024 12:37 AM

அவிநாசி ; 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மையக்கருத்து அடிப்படையில், பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
அவ்வகையில், அவிநாசி வட்டார கலைத் திருவிழா அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டிகளை தலைமையாசிரியர்கள் ரங்கசாமி (காந்தி நகர்), ராமகிருஷ்ணன் (அம்மாபாளையம்), மற்றும் ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர் 119 பள்ளிகளில் இருந்து, 760 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
மாணவர்களின் பல நாள் மேற்கொண்ட பயிற்சியும் முயற்சியும், அவர்களுக்கு ஆசிரியர்கள் தந்த ஆக்கத்தையும், ஊக்கத்தையும் பாராட்டுகிறேன். பரிசு பெறாதவர்கள் திறமை அற்றவர்கள் அல்ல. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அப்பொழுது உங்கள் திறமையை காட்டி முழுமையான வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினர்.
விழாவில், பூண்டி நகராட்சி தலைவர் குமார், துணை தலைவர் ராஜேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுமதி, நகராட்சி கவுன்சிலர்கள் வளர்மதி, லீலாவதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.