/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ரிதன்யா வழக்கு; கணவர் குடும்பத்துக்கு ஜாமின்
/
அவிநாசி ரிதன்யா வழக்கு; கணவர் குடும்பத்துக்கு ஜாமின்
அவிநாசி ரிதன்யா வழக்கு; கணவர் குடும்பத்துக்கு ஜாமின்
அவிநாசி ரிதன்யா வழக்கு; கணவர் குடும்பத்துக்கு ஜாமின்
ADDED : ஆக 22, 2025 08:14 AM
திருப்பூர்; ரிதன்யா தற்கொலை வழக்கில், கைதான கணவர் குடும்பத்துக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் ரிதன்யா, 27. இவருக்கும், திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார், 28 திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 74வது நாளில், ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தந்தைக்கு, தனக்கு கணவர் வீட்டில் ஏற்பட்ட கொடுமைகள் குறித்து 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பியிருந்தார்.
சேவூர் போலீசார் வரதட்சணை கொடுமை வழக்கு பதிந்து கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஜாமின் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு அளித்தனர். இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. கைதான மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கியும், தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் சேவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் என்று நிபந்தனை விதித்தும் நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், ''ஜாமின் உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்து எங்கள் தரப்பு வக்கீலுடன் ஆலோசனை செய்து மேற்கொள்ளப்படும்,'' என்றார்.