/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரட்டையர் இறகுப் பந்து அவிநாசி அணி வெற்றி
/
இரட்டையர் இறகுப் பந்து அவிநாசி அணி வெற்றி
ADDED : மார் 18, 2025 05:25 AM

அவிநாசி : அவிநாசியிலுள்ள பன் அண்ட் ப்ரோலிக் உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
இதில் திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, தஞ்சாவூர், பழநி, சத்தி, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சுமார் 80 அணிகள் பங்கேற்றன. 'நான் மெடலிஸ்ட்' பிரிவில் சாவக்கட்டுபாளையம் குப்புராஜ் - கணேஷ் வெற்றி பெற்றனர். வீரா - அன்பழகன் இரண்டாமிடம், அவிநாசி சரண் - ஹரி மூன்றாமிடம், மதுரையை சேர்ந்த ஸ்ரீராம் - பிரவீன் நான்காமிடம் பெற்றனர்.
இதுதவிர, 'பியூர் நான் மெடலிஸ்ட்' பிரிவில் பழநியை சேர்ந்த சஞ்சய் - சந்தோஷ் ஜோடி, புகழ் - சரண் ஜோடியை வீழ்த்தியது. சத்தியை சேர்ந்து கீர்த்தி - சூர்யா மூன்றாமிடம், ஹர்ஷத் - தர்ஷன் ஆகியோர் நான்காம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு நண்பர்கள் இறகு பந்து கழக தலைவர் ராமசாமி தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
சி.எஸ். ஸ்பின்னிங் மில் உரிமையாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீகண்டன் வரவேற்றார். கோபால் குடும்பத்தினர் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர். சையத் பேட்மிட்டன் அகாடமி நிறுவனர் செய்யது முகம்மது நன்றி கூறினார்.