/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் ராஜகோபுரம் சாரம் அமைக்கும் பணி நிறைவு
/
அவிநாசி கோவில் ராஜகோபுரம் சாரம் அமைக்கும் பணி நிறைவு
அவிநாசி கோவில் ராஜகோபுரம் சாரம் அமைக்கும் பணி நிறைவு
அவிநாசி கோவில் ராஜகோபுரம் சாரம் அமைக்கும் பணி நிறைவு
ADDED : ஜன 20, 2024 02:43 AM

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக கோபுரத்திற்கு சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் பிப்., 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கோவிலில் பல கட்டமாக திருப்பணி வேலைகள், நடைபெற்று வருகிறது.
இதற்காக, கும்பாபிஷேகம் நடைபெறும் பிரதான ஏழு நிலை ராஜகோபுரத்தில் உள்ள ஏழு கலசங்களுக்கு புனித நீர் அபிேஷகம் செய்ய சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் ராஜகோபுரத்தின் உச்சிக்கு செல்ல சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. சிவாச்சாரியார்கள் நின்று கொள்ள வசதியாக பலகைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த சாரம் அமைக்கும் பணிகள் தற்போது முழுமை அடைந்துள்ளது. லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரம், அடி பீடத்திலிருந்து, 108 அடி உயரம் கொண்டது.
இதில், கொடி மரத்தின் மேடை மண்டபத்திலிருந்து சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஏறத்தாழ, 81 அடி உயரத்திற்கு ஆறு இடத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அடி பீடத்தில் இருந்து, 72 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை அம்மன் சன்னதி ராஜகோபுரத்துக்கு சாரம் அமைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.