/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி நிலைமை பிரேமலதா ஆதங்கம்
/
அவிநாசி நிலைமை பிரேமலதா ஆதங்கம்
ADDED : டிச 01, 2025 05:53 AM

அவிநாசி: அவிநாசியில் நடந்த 'உள்ளம் தேடி - இல்லம் நாடி' என்ற தே.மு.தி.க. பிரசார இயக்கத்தில் பிரேமலதா பேசியதாவது:
அவிநாசி தொகுதி முழுவதும் விவசாயமும், விசைத்தறியும் பிரதான தொழிலாக உள்ளது. விசைத்தறிக்கென தனியாக சொசைட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களுக்கு இணைப்பு ஊராக உள்ள சேவூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அவிநாசி சுற்றுப்பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு விபத்துகளில் அவசர சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இல்லாமல் பெயரளவில் மட்டுமே அவிநாசி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது; இதன் தரத்தை உயர்த்த வேண்டும்.
தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியில் மயான வசதி இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு மயான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
அவிநாசியை சுற்றிலும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் மனமகிழ் மன்றம்,டாஸ்மாக் கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இவற்றை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். மாநில பொருளாளர் சுதீஷ், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

