/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கும்பாபிேஷக விழா 2ம் தேதி உள்ளூர் விடுமுறை
/
அவிநாசி கும்பாபிேஷக விழா 2ம் தேதி உள்ளூர் விடுமுறை
அவிநாசி கும்பாபிேஷக விழா 2ம் தேதி உள்ளூர் விடுமுறை
அவிநாசி கும்பாபிேஷக விழா 2ம் தேதி உள்ளூர் விடுமுறை
ADDED : ஜன 30, 2024 11:57 PM
உடுமலை:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு வரும், 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அவிநாசியில் உள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும், 2ம் தேதி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை நாளில், அரசு அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறைநாளுக்குப்பதிலாக, வரும், 3ம் தேதி (சனிக்கிழமை), பணிநாளாக செயல்படும். இத்தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.