/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கும்பாபிேஷகம்; நாளை போக்குவரத்து மாற்றம்
/
அவிநாசி கும்பாபிேஷகம்; நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 31, 2024 11:24 PM
அவிநாசி- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, அவிநாசியில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலாகிறது.
கொங்கேழு ஸ்தலங்களில் முதன்மையான, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நாளை(2ம் தேதி) நடக்கிறது. இதில், ஏராளமானோர் பங்கேற்பர் என்பதால், நாளை ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றத்தை போலீஸ்அறிவித்துள்ளது.
l கோவையில் இருந்து அவிநாசிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கணினி ரவுண்டானாவிலிருந்து சர்வீஸ் ரோடு வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்து அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
l கோவையில் இருந்து சேவூர், சத்தி, புளியம் பட்டி, கோபி செல்லக் கூடிய வாகனங்கள் அவிநாசி கால்நடை மருத்துவமனை ஜங்சன் - முத்துசெட்டிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.
l சேவூர் ரோட்டிலிருந்து திருப்பூர், கோவை, ஈரோடு செல்லும் வாகனங்கள் முத்துசெட்டிபாளையம் வழியாக சென்று கணினி ரவுண்டானா வழியாகவும், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுார் செல்லும் வாகனங்கள் ஆட்டையாம்பாளையம் வழியாகவும் செல்ல வேண்டும்.
l திருப்பூர் மற்றும் ஈரோட்டிலிருந்து சேவூர், சத்தி, புளியம்பட்டி மற்றும் கோபி செல்லகூடிய வாகனங்கள், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவிலிருந்து வலதுபுறம் திரும்பி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயம்பாளையம் வழியாக சென்று மடத்துப்பாளையம் ஜங்சன் (பண்ணாரி அம்மன் கோவில்) வழியாக சேவூர் செல்ல வேண்டும்.
l திருப்பூர் மற்றும் ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம், அன்னுார் செல்லகூடிய வாகனங்கள் சர்வீஸ் ரோடு வழியாகவே, வேலாயுதம்பாளையம் சர்வீஸ் ரோடு ரவுண்டானா மற்றும் ஆட்டையாம்பாளைம் வழியாக அன்னுார் செல்ல வேண்டும்.
மேலும், அவிநாசி டவுனில் இருந்து பஸ் போக்குவரத்து அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மட்டும் தான் செயல்படும். கோவிலுக்கு செல்லகூடிய வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட துாரம் வரை அனுமதிக்கப்பட்டு,
அந்தந்த வழித்தடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் மட்டும் நிறுத்த வேண்டும்.
பிளக்ஸ் போர்டுக்கு தடை
அவிநாசி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் தங்களுடைய வாகனங்களை பொதுசாலையில் நிறுத்தவோ, பிளக்ஸ் போர்டுகளை சாலைகளில் வைக்கவோ கூடாது. விழாவுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.