/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் அறங்காவலர் உறுப்பினர் இருவர் நியமனம்
/
அவிநாசி கோவில் அறங்காவலர் உறுப்பினர் இருவர் நியமனம்
அவிநாசி கோவில் அறங்காவலர் உறுப்பினர் இருவர் நியமனம்
அவிநாசி கோவில் அறங்காவலர் உறுப்பினர் இருவர் நியமனம்
ADDED : மார் 08, 2024 01:48 AM
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பத்து ஆண்டு களுக்கு பிறகு கடந்த ஜூன் 27ல் 5 பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதில், 2023 ஜூலை 5ம் தேதி திருப்பூர் இணை ஆணையர் அலுவலகத்தில் பாப்பீஸ் குழும நிர்வாக இயக்குனர் டாக்டர் சக்திவேல் அறங்காவலர் குழு தலைவராகவும் மீதமுள்ள நான்கு பேர் உறுப்பினர்களாகவும் பதவியேற்று கொண்டனர்.
அதன்பின், பல்வேறு காரணங்களால் ரவி பிரகாஷ், கார்த்திகா ஆகியோர் அறங்காவலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். அதன்பின், காலியாக உள்ள உறுப்பினர் இடத்தை நிரப்புவதற்கான பணிகளை ஹிந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்டனர்.
அவ்வகையில், அவிநாசி பேரூராட்சி, ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதாமணி ஆகியோர் அறங்காவலர்களாக நியமனம் செய்து ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவ்விருவரும், விரைவில் பதவியேற்பர் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

