/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே! பக்தர்களுக்கு வலியுறுத்தல்
/
இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே! பக்தர்களுக்கு வலியுறுத்தல்
இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே! பக்தர்களுக்கு வலியுறுத்தல்
இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே! பக்தர்களுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜன 12, 2024 11:07 PM
உடுமலை:பழநி கோவிலுக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு கருதி, இரவுப்பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், உடுமலை மார்க்கமாக செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும், தேசிய நெடுஞ்சாலை ஓரமே, நடந்து செல்கின்றனர்.
பகலில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், அதிகப்படியானோர் இரவுநேரத்தில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் செயல், ரோட்டில் அதிகவேகமாகச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இரவு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தில், இரவில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால், ரோடுகளும், வாகனங்களும் எளிதில் புலப்படுவதில்லை.
பகலில் நடந்து செல்வோர், ரோட்டின் இடது புறத்தில், கூட்டாக செல்லாமல், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும்.
தவிர்க்க முடியாமல் இரவில் சென்றால், சிவப்பு அல்லது மஞ்சள் நிற 'ரிப்ளக்டர் ஸ்டிக்கர்' கொண்ட மேலாடை, தொப்பி, வாக்கிங் ஸ்டிக், தோல் பை அணிந்தால், வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருப்பர்.
பாதயாத்திரை நல்ல முறையில் நிறைவேற, முழு எச்சரிக்கையுடன், கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.