/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது
/
சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது
ADDED : டிச 20, 2024 04:18 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த, நான்கு துறையினருக்கு துணை முதல்வர் உதயநிதி விருது வழங்கி பாராட்டினார்.
பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவியரில், 97 சதவீதம் மாணவியரின் உயர்கல்வியை உறுதி செய்ததற்காக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா பெற்று கொண்டார்.
அரசு போட்டி தேர்வுகளுக்கு, தேர்வர்களை சிறப்பாக தயார் படுத்தியற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்க்கு விருது வழங்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவியர்கள், நான் முதல்வன் திட்டம் மூலம், உயர்கல்வியில் இணைய சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷாவுக்கும், இலவச வீட்டு மனை பட்டா அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுத்த காங்கயம் தாசில்தார் மோகனனுக்கு விருது வழங்கப்பட்டது.