/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விருது
/
சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விருது
ADDED : நவ 26, 2024 07:44 PM

உடுமலை; மடத்துக்குளம் சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த விழாவில், மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அருள்ஜோதி, மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர்கள், சரவணன், பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாபு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், மற்றும் ஆசிரியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.