/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் அற்ற ஓட்டலுக்கு விருது
/
பிளாஸ்டிக் அற்ற ஓட்டலுக்கு விருது
ADDED : ஜூலை 30, 2025 10:09 PM
கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
உணவு பரிமாறவும், பார்சல் செய்வதற்கும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. பெரியவகை உணவகங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயுடன் கூடிய விருதும், ரோட்டோர சிறு வணிகர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள உணவகத்தினர், வரும் ஆக., மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை பயன்படுத்தும் உணவு நிறுவனங்கள், உரிய சான்றுகளுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண்: 428ல் செயல்படும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.