ADDED : ஜூலை 27, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி காந்திபுரம் பகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தார் அறக்கட்டளை மண்டபம் சார்பில் 2025ம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது; தேசிய அளவில் விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் லோகேஷ், பொருளாளர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.