ADDED : பிப் 12, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக திறனை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் அன்பழகன் விருது பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியான பள்ளியை தெரிவு செய்ய, விரிவான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இதற்கான பள்ளிகளை பரிந்துரைக்க, திருப்பூர் மாவட்டத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு வகையாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாவட்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.