/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு
/
நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு
ADDED : டிச 30, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிர் வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே, தெற்குப்பாளையத்தில் நடந்தது.
செயலாளர் கணபதி தலைமை வகித்தார். தலைவர் சரவணன், துணைத் தலைவர் சின்னதுரை, செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெகிழி பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணி பைகள் பயன்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.