/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவியர் விழிப்புணர்வு
/
மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவியர் விழிப்புணர்வு
ADDED : மார் 25, 2025 06:57 AM

பல்லடம்; சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரி மலையடிபாளையம் கிராமத்தில், கோவை வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு இளங்கலை படிக்கும் மாணவியர் வேளாண் பயிற்சி பெற வேண்டி முகாமிட்டுள்ளனர். இத்துடன், பள்ளி மாணவ, மாணவியருக்குவிழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
முன்னதாக, ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, மாணவியர், சுல்தான்பேட்டையில் தங்கி விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டு அறிந்தனர். இதன் ஒரு பகுதியாக, மரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவம், அளிப்பதால் ஏற்படும் தீமைகள், காடுகளை பராமரித்தல் மற்றும் காடுகளால் உண்டாகும் பயன்கள், மழைநீர் சேகரிப்பு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, அரசின் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல், சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாள் மற்றும் உலக தண்ணீர் தினம் ஆகியவை குறித்து, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர்.