/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விபத்தில்லா திருப்பூர்' 10 இடத்தில் விழிப்புணர்வு
/
'விபத்தில்லா திருப்பூர்' 10 இடத்தில் விழிப்புணர்வு
'விபத்தில்லா திருப்பூர்' 10 இடத்தில் விழிப்புணர்வு
'விபத்தில்லா திருப்பூர்' 10 இடத்தில் விழிப்புணர்வு
ADDED : நவ 10, 2024 04:34 AM

திருப்பூர், : திருப்பூர் மாநகரில் விபத்துக்களை தடுக்கும் வகையில், பத்து இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்லும் போது, விபத்துக்கு வழி வகுத்து விடுகிறது.
இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், போலீசார் நிற்க கூடிய சிக்னல்களில் நின்று செல்கின்றனர். மற்ற இடங்களில் சிலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
இச்சூழலில், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், மாதத்துக்கு, இரு நாட்கள் 'ஜீரோ' விபத்து விழிப்புணர்வை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், வடக்கில், ஐந்து, தெற்கில், ஐந்து என, மாநகரில், பத்து இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முக்கிய சந்திப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளை அழைத்து, 'ஹெல்மெட்' அணிவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை சொல்லி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை போலீசார் வழங்கினர்.