/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டம் வாயிலாக பாதுகாப்பு முகாமில் விழிப்புணர்வு
/
சட்டம் வாயிலாக பாதுகாப்பு முகாமில் விழிப்புணர்வு
ADDED : நவ 28, 2024 06:25 AM
திருப்பூர்; தேசிய அரசியலமைப்பு சட்ட நாளை முன்னிட்டு, திருப்பூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், தேசிய சட்ட நாளை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம், சூசையாபுரத்தில் நேற்று நடந்தது. திட்ட மேலாளர் சந்திரா தலைமை வகித்தார். கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் வக்கீல் தமயந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ), குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம், 2005 ஆகிய சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கினார். விழுதுகள் கள ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் அசோக், சூர்யா மற்றும் தன்னார்வலர்கள் கீதா, பிருந்தா, கார்த்திகா உட்பட, தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அனைவரும் தேசிய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.