நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் சட்ட சபை தொகுதி தேர்தல் பிரிவு சார்பில், வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் இணைய வேண்டியதன் அவசியம், தேர்தல்களின் போது வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தற்போது நடந்து வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் குறித்த விழிப்புணர்வு முகாம், உடுமலை பிரியா பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் மையத்தில் நடந்தது.
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கண்ணாமணி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வளர்மதி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், பிரியா நர்சிங் கல்லுாரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில், இளம் வாக்காளர்களுக்கு வாக்காளராக பதிவு செய்யும் முறை குறித்தும், படிவம் 6, 6ஏ, 6பி மற்றும் 7, 8 ஆகிய படிவங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.