sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

/

 கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

 கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

 கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 07, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே, முருங்கப்பட்டியில் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உடுமலை கால்நடைத்துறை சார்பில், குடிமங்கலம் ஒன்றியம், பொன்னேரி கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட, கோட்டமங்கலம், முருங்கப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குடிமங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் கோவிந்தராசு, பிரசாந்த், கால்நடை ஆய்வாளர் சுதா பிரியா, உதவியாளர்கள் மதன்குமார், சுப்ரமணியம் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில், பசுக்கள், கன்றுகள் என, 150 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், 200 கோழிகளுக்கு, கழிச்சல் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும், 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சையும், 10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 25 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

முகாமில், 34 பேருக்கு, கால்நடைகளுக்கான தாது உப்புக்கலவை மற்றும் சிறந்ந கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us