ADDED : ஜூன் 29, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
வெள்ளகோவில்: மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்த மாவட்ட தொழில் மையத்தின் சிறப்பு விழிப்புணர்வு முகாம், இன்று (30ம் தேதி) காலை மூலனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மதியம் வெள்ளகோவில் ஒன்றிய அலுவலகத்திலும் நடக்கிறது.
இம்முகாமில் குறு, சிறு தொழில்களுக்கான மானிய திட்டங்கள் மற்றும் உதயம் பதிவு குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளதால், இப்பகுதி இளைஞர்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்; கூடுதல் விவரங்களுக்கு 89255 34022, 89255 34025 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
