ADDED : டிச 18, 2024 11:03 PM

பல்லடம்,; கள்ளச்சாராயம் மற்றும் மதுவின் தீமைகள் குறித்து, பல்லடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை இந்திரா சில்ட்ரன் பிலிம்ஸ் இசைக்குழு மற்றும் கலைக்குழு சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், பல்லடத்தில் நடந்தது.
முன்னதாக, பல்லடம் பஸ் ஸ்டாண்டில், இசைக்குழு இயக்குனர் அருணகிரி தலைமையிலான கலைஞர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் பாடியபடியும், இசை வாசித்து, நடனமாடியபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
