ADDED : மார் 19, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:அனைவருக்கும் ஓட்டளிக்க வலியுறுத்தி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் காங்கயத்தில் நடைபெற்து.
தேர்தல் ஆணைய உத்தரவுபடி, 'அனைவரும் ஓட்டளிப்போம், நமது இலக்கு, நுாறு சதவீத ஓட்டுப்பதிவு' என்பதை வலியுறுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் காங்கயம் பஸ் ஸ்டாண்டில் துவங்கியது. கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை காங்கயம் தாசில்தார் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
