/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
/
வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 05, 2025 11:19 PM
உடுமலை,: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மக்காச்சோளம் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தது.
திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். உடுமலை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார், இ -நாம் திட்டத்தில் மக்காச்சோளம் கொள்முதல் செய்வது, மின்னணு பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்து விளக்கினார்.
மேலும், ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்று மக்காச்சோளத்திற்கு, சந்தைக் கட்டணம் செலுத்தி உரிய அனுமதிச்சீட்டு பெற்று வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும், கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்களை மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு பெற்ற கிடங்குகளில், இருப்பு வைத்து, மின்னணு ரசீது வாயிலாக வங்கிகளில் கடன் பெறுவது குறித்தும் வணிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
விற்பனை கூட மேற்பார்வையாளர் அருண்குமார், இளநிலை உதவியாளர் கிருத்திகா மற்றும் ஏராளமான வணிகர்கள் பங்கேற்றனர்.