/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தரம் பிரிக்க தேவை விழிப்புணர்வு; திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்

ADDED : நவ 08, 2024 11:52 PM

உடுமலை; உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் சென்று, துாய்மைப்பணியாளர்கள் குப்பை சேகரித்து, நுண் உரக்குடில் வாயிலாக உரமாக மாற்றுவது, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை முறையாக அழிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, நகராட்சி சார்பில், வீடுகள், வணிக நிறுவனங்களிடம், சொத்து வரிக்கு ஏற்ப, ஆண்டுக்கு, 120 முதல், 600 ரூபாய் வரை சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், குப்பையை வகை பிரித்து, துாய்மைப்பணியாளர்களிடம் வழங்குவதில்லை.
பிளாஸ்டிக் கழிவு, உணவு கழிவு, அபாயகரமான கழிவு அனைத்தையும் ஒரே கழிவாக, துாய்மைப்பணியாளர்களிடம் வழங்குவதால், அவற்றை தரம் பிரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
மேலும், பொது இடங்களில் கழிவுகளை கொட்டும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இதனால், நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் , வீடுகள், வணிக நிறுவனங்களில் வெளியேற்றப்படும் கழிவுகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.