ADDED : மார் 09, 2024 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி அரசு கல்லுாரி சூழல் மன்றத்துடன் மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்டம், 'ல' கலைக்குழுவை சேர்ந்த கலைஞர்கள் விழிப்புணர்வு நாடகம், பாடல்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் நளதம் தலைமையில், சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டார்.
சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பாசிரியர் மணி வண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சரவணன் மற்றும் ஜோதிபாண்டி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

