/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2025 09:34 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில் -- 136, குடிமங்கலத்தில் -- 75 மற்றும் மடத்துக்குளத்தில் -- 77 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில் இரண்டு முதல் 6 வயது வரை குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
அதேபோல், அந்தந்த மையங்களுக்கு அருகிலுள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான சத்துமாவு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு முதல் புதிதாக வாரந்தோறும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர்கள் வாயிலாக, 'பச்சிளம் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முதல் நாளாக நேற்று, வாளவாடி, உடுமலை நகர்ப்பகுதி, எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம், பாலுாட்டும் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து விளக்கமளித்தனர்.