
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடந்த 5ல் துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி, காவல்துறை சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.