ADDED : ஜூன் 18, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்,:மதுவிலக்கு
அமலாக்க பிரிவு சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி,
தாராபுரத்தில் நடந்தது.
தாராபுரம் வசந்தா ரோட்டில் புறப்பட்ட
பேரணிக்கு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் லோகநாதன் தலைமை
தாங்கினார். அமராவதி சிலை ரவுண்டானா வழியாக சென்ற பேரணி புது பஸ்
ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
பங்கேற்று, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
