ADDED : ஜன 13, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார், ஜன. 13-
போகிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பல்வேறு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிக்கண்ணா கல்லுாரி இணைந்து மாசில்லா போகி என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜ்குமார், மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் சாமிநாதன், கல்வி அலுவலர் பூங்கொடி, பி.வி.கே.என்., பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் பங்கேற்றனர்.