/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தின்றி வாகனங்கள் இயக்க விழிப்புணர்வு
/
விபத்தின்றி வாகனங்கள் இயக்க விழிப்புணர்வு
ADDED : பிப் 13, 2024 12:52 AM

திருப்பூர்;போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழா, கடந்த, ஜன., 15ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாலை போக்குவரத்து விதிகள், டிரைவர், நடத்துனர், பயணிகள் கடமை, உரிமை, பொறுப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாகனத்தை தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் துவக்கி வைத்தார். ஆய்வாளர் நிர்மலாதேவி முன்னிலை வகித்தார்.
விபத்தில்லாமல் வாகனம் இயக்குவது குறித்து டிரைவர்களுக்கு, போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் மாரியப்பன் அறிவுரை வழங்கினார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு வாகனத்தில் ஏறி, பார்வையிட்டனர்.
'சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதுங்கள்' எனும் தலைப்பில் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பாக, விபத்தில்லாமல் வாகனத்தை இயக்குவது எப்படி, எச்சரிக்கை சின்னங்கள், தகவல் சின்னம் எவை, பார்வை மறைவு பகுதி, ரயில் பாதை, மலைப்பாதையில் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், ெஹல்மெட், சீட்பெல்ட் அணிவதன் அவசியம், கட்டாயப்படுத்துவது ஏன், கனரக வாகன டிரைவர் பயிற்சி, நடத்துனர் லைசன்ஸ் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் இருந்த 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு...' என தலைப்பிட்டு, விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.