/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு; நகராட்சியில் துவக்கம்
/
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு; நகராட்சியில் துவக்கம்
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு; நகராட்சியில் துவக்கம்
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு; நகராட்சியில் துவக்கம்
ADDED : செப் 18, 2024 10:09 PM

உடுமலை: உடுமலை நகராட்சியில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, செப்., 17 முதல் அக்., 2 வரை, நகராட்சி பகுதிகளில், தினமும், பல்வேறு விழிப்புணர்வு பணி மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை பஸ் ஸ்டாண்டில்,, துாய்மை பாரத திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவக்க விழா நடந்தது. நகராட்சித்தலைவர் மத்தீன், கமிஷனர் பாலமுருகன், துப்புரவு அலுவலர் நாட்ராயன், துப்புரவு ஆய்வாளர் செல்வம், சிவக்குமார், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.
முதல் நாள், துாய்மை சேவை என்ற தலைப்பின் கீழ், துாய்மைப்பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச்சென்று, கழிவுகளை தரம்பிரித்து வாங்கும் பணி, பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவ, மாணவர்களுக்கு 'நகரின் தூய்மை ; நமக்கு பெருமை' என விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், நகரிலுள்ள, 33 வார்டுகளிலும், தினமும் பல்வேறு வகையான விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படும்.
மாஸ் கிளீனிங், மழை நீர் வடிகால் துார்வாருதல், சுவரொட்டிகள் அகற்றுதல், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம், ஊர்வலம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் என தினமும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.