/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் :அழைப்பிதழ் வினியோகம் தீவிரம்
/
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் :அழைப்பிதழ் வினியோகம் தீவிரம்
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் :அழைப்பிதழ் வினியோகம் தீவிரம்
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் :அழைப்பிதழ் வினியோகம் தீவிரம்
ADDED : ஜன 06, 2024 11:16 PM

திருப்பூர்:அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் திருப்பூரில் பொதுமக் களுக்கு வழங்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
உ.பி., மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், திருப்பூரில் 5 லட்சம் குடும்பங்களுக்கு கும்பாபிஷேக அட்சதை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31ம் தேதி துவங்கியது.
ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் திருப்பூர் பொறுப்பாளர்கள் மோகன், கணேசன், செந்தில்வேல், தீனதயாளன் ஆகியோர் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்ளிட்டோருக்கு வழங்கினர்.
பொறுப்பாளர்கள் கூறியதாவது: வரும், 22ம் தேதி, பகல் 12:20 மணிக்கு, ஸ்ரீராமரின் குழந்தை வடிவிலான விக்ரஹம் ஸ்ரீராம ஜென்ம பூமியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் ப்ராண பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இது நாடு முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதற்காக அயோத்தி, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், தமிழகம் முழுவதும் ஒரு கோடி ஹிந்து குடும்பத்தினரையும், திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து லட்சம் குடும்பத்தாரையும், நேரில் சந்தித்து கும்பாபிஷேக அட்சதை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஸ்ரீராமரின் படம் வழங்கப்படவுள்ளது. அந்த நாளில் அவரவர் வீடுகளில் இப்படத்துக்கு இந்த புனித அட்சதையைத் துாவி வழிபட வேண்டும்.
ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கோவில்களுக்கு அப்பகுதியினரை வரவழைத்து, ஸ்ரீராம மந்திரத்தை 108 முறை சொல்லி, பஜனை, கீர்த்தனை, மேள தாளம், சங்கொலி, மணியோசை, தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கவுள்ளனர்.
ப்ராண பிரதிஷ்டை நாளன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக வீடு தோறும் திருக்கார்த்திகை தீபமேற்றி, ஆண்டின் இன்னொரு தீபாவளியாக சிறப்பாகக் கொண்டாட வேண்டும். மேலும், அயோத்தியில் ப்ராண பிரதிஷ்டை நிறைவுற்ற பின், அவரவருக்கு வசதிப்படும் நாளில் அயோத்தி சென்று, குழந்தை வடிவிலான ஸ்ரீராமரை வழிபட்டு அனுக்கிரஹம் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.