/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் 'பறக்கும்' திருப்பூர் 'டி - ஷர்ட்'

ADDED : ஜன 20, 2024 12:42 AM

திருப்பூர்:அயோத்தி ஸ்ரீராமர் கோவில், இந்தியாவின் மாபெரும் வழிபாட்டு தலமாக அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உ.பி., - ம.பி., போன்ற மாநிலங்களுக்கு, திருப்பூரில் இருந்து, 'டி - ஷர்ட்' அனுப்பும் பணி வேகம் அடைந்துள்ளது.
'ஸ்ரீராம் ஜெயராம்' என்ற ஹிந்தி வாசகம் அச்சிடப்பட்ட ஸ்ரீராமர் படம், அயோத்தி கோவில் படங்களுடன், பல வகை 'டி -ஷர்ட்'கள் தயாரித்து அனுப்பும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது.
ஸ்ரீராம் என்று, 108 முறை அச்சிடப்பட்ட டி -ஷர்ட், 'ஜென்மபூமி, ராம் என்று அச்சிடப்பட்ட குளிர்கால ஆடைகள், ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரம், 'ஸ்ரீராமரை அழைத்து வந்தவர்கள், ஸ்ரீராமரை அழைப்பவர்களை அழைத்துச் செல்வோம், ஸ்ரீராமரை ஏற்போம்' என்று பல வாசகங்களை ஹிந்தியில் அச்சிட்டு, லட்சக்கணக்கான 'டி -ஷர்ட்'கள், அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திருப்பூர், 'தி ஸ்பர் இன்க்' நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் அமைந்த பின், திருப்பூருக்கு புதிய தொழில் வர்த்தக வாய்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது, 'வெள்ளை மற்றும் காவி நிற 'டி - ஷர்ட்'டுகளை வாங்கி செல்கின்றனர்.
கும்பாபிஷேகத்துக்கு மட்டுமல்ல, 'ஜெய் ஸ்ரீராம்' என்ற, 'டிரேடு மார்க்'குடன், திருப்பூர் 'டி - ஷர்ட்'டுகளுக்கு தொடர்ச்சியாக ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
ஸ்ரீராமர் கோவிலால் உத்தரபிரதேசத்தில் மட்டுமல்ல, திருப்பூரிலும் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.