/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
/
தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED : அக் 02, 2025 12:04 AM

உடுமலை; உடுமலை பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
தேவியரை தினமும் ஒவ்வொரு அம்சமாக வழிபடும் நவராத்திரி விழாவில் சிறப்பு அம்சமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. உடுமலை பகுதிகளில், நுால் மில்கள், காகித ஆலைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், நேற்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயந்திரங்கள், தொழிற்சாலை வளாகங்களை துாய்மைப்படுத்தி, கோலமிட்டும், அலங்கரிக்கும் பணிகள் நடந்தது.
ஆயுதபூஜையின் மங்கலப்பொருட்களாக, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, தொழில் வளம் சிறக்க வழிபட்டனர். வீடுகளிலும், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதே போல், கோவில்களிலும், ஆயுத பூஜையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. அதே போல், கல்விக்கடவுளான சரஸ்வதியை வழிபடும், விஜயதசமி விழா இன்று கொண்டாடப்படுகிறது.