ADDED : பிப் 17, 2025 11:40 PM

அ நிறம் | அளவு
பல்லடம்; பல்லடம் பூப்பந்தாட்ட குழு சார்பில், 11ம் ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
நகராட்சி தலைவர் கவிதாமணி போட்டிகளை துவக்கி வைத்தார். பூப்பந்தோட்ட குழு தலைவர் சாகுல் அமீது வரவேற்றார். நிர்வாகிகள் ஷேக் மக்துாம், சுரேஷ் கண்ணன், வெங்கிடுபதி, லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொது பிரிவில், 16 அணிகள், ஆண்கள் பிரிவில், 14 அணிகள் மற்றும் பெண்கள் அணியில், 5 என, மொத்தம், 35 அணிகள் மோதிக்கொண்டன.
