/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா பள்ளிகளுக்கு பேட்மின்டன் போட்டி
/
சகோதயா பள்ளிகளுக்கு பேட்மின்டன் போட்டி
ADDED : அக் 14, 2025 11:19 PM

திருப்பூர்; திருப்பூர், காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா சி.பி.எஸ்.இ. கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டி நடந்தது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவுக்கு, ஏ.வி.பி.கல்விக்குழுமத்தின் பொருளாளர் லதா கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி. பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். ஏ.வி.பி.கல்விக்குழுமத்தின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளைத் துவக்கி வைத்து, மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரியங்கா நன்றி கூறினார். ஏ.வி.பி.பள்ளி உடற்கல்வித்துறை இயக்குனர் மோகன்ராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.