/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேட்மின்டன் போட்டி; இளம் வீரர்கள் அபாரம்
/
பேட்மின்டன் போட்டி; இளம் வீரர்கள் அபாரம்
ADDED : ஆக 25, 2025 10:35 PM

திருப்பூர்; தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 13 வயதுக்குட்பட்ட, சப் - ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்- 2025 போட்டி, திருப்பூர், மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் நேற்று துவங்கியது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 650 வீரர், வீராங் கனைகள் பங்கேற்று, திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், ஒற்றையர் பிரிவில், 32 சிறந்த வீரர்கள் மற்றும் இரட்டையர் பிரிவில், 16 சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையேயான அடுத்தடுத்த சுற்று போட்டிகள் வரும் நாட்களில் நடக்கும்.
இதில் இருந்து, அரையிறுதி, தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.