ADDED : பிப் 16, 2026 05:38 AM

திருப்பூர்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜா பிதா பிரம்மா குமாரிகளின் தமிழ்நாடு மண்டலம் சார்பில், 'சிவனும் நானும்' என்ற தலைப்பில் சிறப்பு தியான நிகழ்ச்சி, 120 தியான மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர், காந்தி நகர், ஓம் சாந்தி பவனில் ராஜயோக தியான நிலையத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி துவங்கியது. கிட்ஸ் கிளப் பள்ளி சேர்மன் மோகன் கார்த்திக், குஜராத்தி திருமண மண்டபம் சுரேஷ் வைபவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆறு மாதங்களாக பிரம்ம குமாரிகள் தியான மையத்தில், ஆயிரத்து, எட்டு மணி நேரம் தியானம் இருந்தனர். தற்போது, சிவராத்திரியை முன்னிட்டு, தியான மையத்தில் பொதுமக்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அறையில், சிவலிங்கம், கேதர்நாத், ராமேஸ்வரம் மற்றும் விஸ்வநாத் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியானம் முடிந்த பின், அங்கு பங்கேற்ற பொதுமக்கள் எதிர்மறை எண்ணங்கள் விலகும் வகையில், உற்சாகமாக பலுான்களை பறக்க விட்டு மகிழ்ந்தனர்.
