/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
ADDED : டிச 03, 2024 11:29 PM

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திற்கு கனமழை உள்ளதாக, இந்திய வானிலை மையம் 'மஞ்சள் அலர்ட்' வெளியிட்டிருந்தது.
கன மழைக்கான வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கருதி, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல, சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழித்தடம் அடைத்து, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக பூஜைகள் மற்றும் தரிசனம் நடந்தது.
சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து திருமூர்த்திமலைக்கு வந்திருந்தனர்.
அருவிக்கு செல்ல முடியாத நிலையில், மலையடிவாரத்திலுள்ள தோணியாற்றில் நீராடி, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.