ADDED : பிப் 17, 2024 11:48 PM
பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது, ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டு, பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. 'ரோடாமின் பி' என்ற நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதால், பஞ்சு மிட்டாய் என்பது பாதுகாப்பற்ற உணவு என, அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 'ரோடாமின் பி' என்ற ஆபத்தான செயற்கை நிறமூட்டியுடன் உணவு பொருட்கள் தயாரிப்பது, பொட்டலமிடுவது, இறுக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பறிமாறுவது, தண்டனைக்குரிய குற்றம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது. மீறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.