ADDED : பிப் 06, 2024 01:25 AM
அவிநாசி:சேவூர், நம்பியூர் ரோட்டில் செயல்பட்டு வந்த வாழைக்காய் ஏல மையத்தில் வரும் 22ம் தேதி முதல் வாரம்தோறும் வியாழக்கிழமைவாழைக்காய் ஏலத்தை நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஏலத்திற்கு வாழைக்காய் கொண்டு வரும் விவசாயிகள் வேளாண்மை விற்பனை துறை மூலம் கொடுக்கப்பட்டுள்ள 'கியூஆர்கோடு' ஸ்கேன் செய்து தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் 98429 31585 என்ற எண் வாயிலாக தொடர்பு கொள்ளவும், மண்டி பகுப்பாய்வாளரை 97891 51674 எண்ணில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மோகனா, வேளாண்மை விற்பனைத்துறை உதவி அலுவலர் சங்கர் கணேஷ், தோட்டக்கலைத்துறை உதவியாளர் ஸ்ரீ, விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரமோகன், ஏ.பி.டி.பி., இயக்குனர் கதிர்வேல், அவிநாசியப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.